உள்ளூர் செய்திகள்

ரயில் அருங்காட்சியகம்: ஒரு நாள் இலவச அனுமதி

குழந்தைகள் தின விழா கொண்டாட்டங்களின் ஒருபகுதியாக, ஐ.சி.எப்., வளாகத்தில் உள்ள வட்டார ரயில் அருங்காட்சியகத்தில், வரும் 14ம் தேதி மட்டும் பள்ளிக் குழந்தைகள் இலவசமாக அனுமதிக்கப்படுகின்றனர். இந்த அருங்காட்சியகத்திற்கு குழந்தைகள் வர வசதியாக, நுழைவுக் கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதில், புதுக் காட்சிப் பொருட்கள், படவிளக்கங்கள் மற்றும் கலைப் பொருட்கள் குழந்தைகளின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை அருங்காட்சியகம் செயல்படும். குழந்தைகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஓவியப் போட்டி, அன்று காலை 10 மணியளவில் இங்கு நடத்தப்படுகிறது. இப்போட்டியில் பங்கேற்கும் குழந்தைகள் தங்களின் சொந்த வரைபடக் கருவிகளை கொண்டு வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு, 90031 41003 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு ஐ.சி.எப்., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்