உள்ளூர் செய்திகள்

அடுத்த மாதம் சென்னையில் கடல்சார் பல்கலை. தொடக்கம்

வருகிற டிசம்பரில் நடைபெறும் விழாவில் தமிழக முதல்வர் கருணாநிதி இந்த புதிய பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார் என்று மத்திய கப்பல் மற்றும் தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் டி.ஆர். பாலு தெரிவித்தார். சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்தப் பல்கலைக்கழகத்திற்கு சென்னை, மும்பை, கோல்கட்டா, விசாகப்பட்டினம் ஆகிய இடங்களிலும் வளாகங்கள் இருக்கும். ரூ.245 கோடி செலவில் இந்த வளாகங்கள் உருவாக்கப்படும். கடல்சார் படிப்புகளை நடத்துவதுடன் அதுகுறித்த ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கப் பணிகளிலும் இந்த புதிய பல்கலைக்கழகம் ஈடுபடும். மெரைன் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி, மெரைன் என்விரான்மெண்ட் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த துறைகளிலும் இப்பல்கலைக்கழகம் கவனம் செலுத்தும். ரூ.1,500 கோடி செலவில் தேசிய கடல்சார் அருங்காட்சியக வளாகம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. தனியார்-பொதுத்துறை கூட்டுறவில் இத்திட்டத்திற்கான நிதி திரட்டப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்