ஆசிரியர் தின நாளன்று ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு
சங்க செயற்குழு கூட்டம், 4ம் தேதி, நாமக்கல்லில் நடந்தது. ஊதிய குறைதீர் குழு அறிக்கையின் அடிப்படையில், தமிழக அரசு வெளியிட்ட அரசாணைகளில், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய உயர்வு, முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு உள்ளது. இடைநிலை ஆசிரியர்களின் ஊதியத்தை, மத்திய அரசு ஆசிரியர்களின் ஊதியத்திற்கு இணையாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, போராட்டங்கள் நடத்தப்படும். முதலில், வரும், 13ம் தேதி, உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்கள் முன், ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். 5ம் தேதி முதல், கறுப்பு பேட்ஜ் அணிந்து, பணிக்குச் செல்வது, ஆசிரியர் தினமான, செப்., 5ல், மாவட்ட அளவில், ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும், தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இவ்வாறு, ஆசிரியர் கூட்டணி அறிவித்துள்ளது.