உள்ளூர் செய்திகள்

அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் சம்பளமின்றி தவிப்பு

இவர்களுக்கு, ஆண்டிற்கு 10 மாதங்கள் மட்டுமே சம்பளம் என்ற விகிதத்தில், நியமனம் செய்யப்பட்டனர். அதே போல் ஒவ்வொரு ஆண்டும், பணி உத்தரவாதத்திற்கான ஆணை உயர்கல்வித் துறையால்,வெளியிடப்படும். கடந்த ஜூனில் வெளியிட வேண்டிய, பணி உத்தரவாதத்திற்கான ஆணை, இதுவரை வெளியாகவில்லை. இதனால், அரசு கல்லூரிகளின் கவுரவ விரிவுரையாளர்கள், கடந்த ஏப்ரலில் இருந்து 4 மாதங்களாக சம்பளம் பெறவில்லை. அவர்கள், குடும்பம் நடத்த முடியாமல், தவித்து வருகின்றனர். கவுரவ விரிவுரையாளர்கள் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், "பணி உத்தரவாதத்திற்கான, ஆணை முதல்வரின் ஒப்புதலுக்காக வைக்கப்பட்டுள்ளதாக, உயர்கல்வித்துறையில் தெரிவிக்கின்றனர். கல்வி ஆண்டு துவக்கத்தில் சம்பளமில்லாததால், எங்கள் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க முடியாமல் தவிக்கிறோம்" என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்