உள்ளூர் செய்திகள்

கல்வித்துறை இணை இயக்குனர்கள் பதவி உயர்வு இழுத்தடிப்பு

மதுரை: கல்வித்துறை இணை இயக்குனர் பதவி உயர்வு பட்டியல் வெளியாவதில், தொடர்ந்து தாமதம் ஏற்படுவது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக் கல்வித்துறையில், பணியாளர் தொகுதி, மேல்நிலைக் கல்வி, நூலகம், தேர்வுத்துறையில் பணியாளர் தொகுதி உட்பட 5 முக்கிய இணை இயக்குனர்கள் பணியிடங்கள், பல மாதங்களாக, காலியாக உள்ளன. இயக்குனர்கள் பணியிட மாற்ற அறிவிப்பில் ஏற்பட்ட தாமதத்தால், இணை இயக்குனர் பதவி உயர்வு பட்டியலில் உள்ள, முதன்மை கல்விக் அலுவலர்களின் விவரம் வெளியிடுவதிலும், சிக்கல் ஏற்பட்டது. ஆனால், மாவட்டக் கல்வி அலுவலர்கள் பணிமாற்றம், பதவி உயர்வு; முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணிமாற்றம் நடந்து பல நாட்களாகியும், காலியாக உள்ள, இணை இயக்குனர்கள் பணியிடங்களை நிரப்புவதில் மட்டும் சிக்கல் நீடிக்கிறது. கல்வி அதிகாரிகள் கூறியதாவது: கல்வித்துறை வரலாற்றில் இதுவரை, இயக்குனர், இணை இயக்குனர், முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் என்ற "ஆர்டர்&' படிதான், பதவி உயர்வு மற்றும் பணியிடமாற்றம் அறிவிக்கப்படும். இந்த ஆண்டு மட்டும், மாவட்டக் கல்வி அலுவலர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்கள் என, தலைகீழ் முறையில், அறிவிப்பு வெளியானது. ஆனால், முதன்மை கல்வி அலுவலர்களின், இணை இயக்குனர் பதவி உயர்வு பட்டியல் அறிவிப்பு மட்டும், தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. காரணம் என்ன? என, தெரியவில்லை. நியாயமான முறையில், பதவி உயர்வு அளிக்கப்பட வேண்டும், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்