ஒரே நாளில் இரு தேர்வுகள்: மாணவர்களுக்குக் குழப்பம்
வருவாய்த்துறை உதவியாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், இரண்டாம்நிலை சார்பதிவாளர், கூட்டுறவு சங்க முதுநிலை ஆய்வாளர் உள்ளிட்ட 2,400 பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப்-2 தேர்வுகளை அறிவித்துள்ளதுஇத்தேர்வுக்கு விண்ணப்பிக்க, டிசம்பர் 30 கடைசி தேதி என்றும், தேர்வுகள் 22.3.09 அன்று காலை 10 மணி முதல் பகல் ஒரு மணி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.இதேபோல், மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறையில் காலியாக உள்ள, மத்திய தொழிலாளர் அமலாக்க அதிகாரி உள்ளிட்ட 11 பணியிடங் களை நிரப்புவதற்காக, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) தேர்வுகளை அறிவித்துள்ளது. இத்தேர்வுகளும் 2009 மார்ச் 22 அன்று முற்பகலில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.