காஞ்சிபுரம் பேராசிரியர் எழுதிய நூலுக்கு அரசு விருது
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பேராசிரியர் எழுதிய நூலுக்கு தமிழக அரசின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்துள்ளது.காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரிப் பேராசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் பாலன். இவர், சிந்தி கல்லூரி முதல்வர் தட்சிணாமூர்த்தியுடன் இணைந்து, ‘இந்திய அரசியல் அமைப்பின் வளர்ச்சியும் விடுதலை இயக்க வரலாறும்’ என்ற நூலை எழுதினார்.இந்நூலில் 1773ம் ஆண்டு ஒழுங்கு முறை சட்டம் முதல் 1950ம் ஆண்டின் இந்தியக் குடியரசு சட்டம் வரை, 1885ம் ஆண்டு துவக்கப்பட்ட இந்திய தேசிய இயக்கத்தின் வரலாற்றிலிருந்து இந்தியா சுதந்திரம் பெற்ற வரை நடந்த நிகழ்ச்சிகள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.இந்நூல் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் சட்டவியல், அரசியல் என்ற வகைப்பாட்டின் கீழ் சிறந்த நூலாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நடந்த விழாவில் தமிழக முதல்வர், ரொக்கப்பரிசு மற்றும் சிறந்த நூலுக்கான சான்றிதழை வழங்கினார்.