சென்னையில் இசை மற்றும் கலை பள்ளி துவக்கம்
சென்னை: சென்னை, பெருங்குடியில் டி.வி.ஜி. அகாடமியின் இசை மற்றும் கலை பள்ளி இம்மாதம் 27ம் தேதி துவங்கப்படுகிறது. இதுகுறித்து டி.வி.ஜி. அகாடமி வெளியிட்டுள்ள அறிக்கை: இசைத் துறை ஜாம்பவானும், பத்மபூஷண் விருது பெற்றவருமான டாக்டர் டி.வி.கோபாலகிருஷ்ணனால் துவங்கப்பட்டது டி.வி.ஜி. அகாடமி. இதைத் தொடர்ந்து, டி.வி.ஜி. அகாடமி சார்பில் இசை மற்றும் கலை பள்ளி 1ஏ, அண்ணா நெடுஞ்சாலை, கந்தன்சாவடி, பெருங்குடி என்ற முகவரியில் வரும் 27ம் தேதி துவங்கப்படுகிறது. சுமா ஹாரிஸ் ஜெயராஜ் பள்ளியைத் துவக்கி வைக்கிறார். சூசன் பார்மசூடிக்கல் தலைவர் அபய குமார் பள்ளியின் இணையதளத்தைத் துவக்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சிகள் மாலை 6:30 மணிக்கு நடக்கின்றன. இசையில் ஆர்வமுள்ள குடும்பத் தலைவியர், வேலைக்கு செல்வோருக்காக வார விடுமுறை நாள்களில் வகுப்புகள் நடக்கும். அதேபோல் மூன்று முதல் ஆறு வயதுடைய குழந்தைகளுக்கு விளையாட்டுடன் இசையை கற்பிக்கும் வகுப்புகள், மாதத்தில் இரு நாள்கள் நடக்கும். மேலும் விவரங்களுக்கு 044- 2496 4878, 99628 59198 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.