மாணவிகளின் பாதுகாப்பு தொடர்பான போலீஸ் ஆலோசனை கூட்டம்
விருத்தாசலம்: விருத்தாசலம் உட்கோட்ட போலீசாருடனான ஆலோசனைக் கூட்டம், டி.எஸ்.பி., அலுவலகத்தில் நடந்தது. டி.எஸ்.பி., வெங்கடேசன் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், தமிழ்மாறன், ராஜேந்திரன், அழகுராணி, வடிவேலு, சப் இன்ஸ்பெக்டர்கள் அருண்குமார், நரசிம்மஜோதி, ஈஸ்வரி, செந்தாமரை, கணேசன், மல்லிகா மற்றும் போலீசார் பங்கேற்றனர். கூட்டத்தில், பஸ்சில் செல்லும் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு தர வேண்டும். காலை, மாலை வேளைகளில் பள்ளி, கல்லூரி வளாகங்களில் மாணவிகளிடம் தொந்தரவு செய்வோரை உடனடியாக கைது செய்ய வேண்டும். இரவு நேரத்தில் ரோந்து சென்று, குற்ற நிகழ்வுகளை தடுக்க வேண்டும் என டி.எஸ்.பி., வெங்கடேசன் அறிவுரை வழங்கினார்.