உள்ளூர் செய்திகள்

மாணவர் போராட்டம் எதிரொலி: காலவரையின்றி கல்லூரி மூடல்

ஈரோடு: ஈரோடு, வீரப்பன்சத்திரம் சி.என். கல்லூரியை அரசு கல்லூரியாக அறிவிக்க வேண்டும் என கல்லூரி மாணவ மாணவியர் மற்றும் பல அமைப்பினர் கடந்த சில நாட்களாகவே தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டத்துக்கு கல்லூரி பேராசிரியர்களும் ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். அரசியல் கட்சிகள், தனியார் அமைப்புகளும் மாணவர்கள் கோரிக்கைக்கு செவி சாய்க்க வேண்டும் என்று தமிழக அரசை வலியு றுத்தி வந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன் கல்லூரி முன் மாணவ மாணவியர் வாயில் கதவை மூடி, தர்ணாவில் ஈடுபட்டனர். போராட்டத்தின் அடுத்தகட்டமாக இன்று (23ம் தேதி) முதல் மூன்று நாட்கள் உள் இருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக மாணவ மாணவியர் அறிவித்தனர். மாணவர்களின் போராட்டத்துக்கு இந்திய மாணவர் சங்கமும் ஆதரவு தெரிவித்தது. எனவே "கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் ஜெகதீசன் உத்தரவுப்படி சி.என்.கல்லூரி நாளை (இன்று) முதல் காலவரையின்றி மூடப்படுகிறது. கல்லூரி திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்" என சி.என். கல்லூரி முதல்வர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்