உள்ளூர் செய்திகள்

பேராசிரியர் பணியிடங்கள் காலி: கல்லூரி முதல்வர்கள் ஆலோசனை

புதுச்சேரி: அரசு கலை கல்லூரி முதல்வர்களின் ஆலோசனை கூட்டம் உயர்க்கல்விதுறை இயக்குநர் தலைமையில் நேற்று நடந்தது. புதுச்சேரியில் தாகூர், பாரதிதாசன், இந்திராகாந்தி உட்பட 6 அரசு கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளில் ஏராளமான பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதே பிரச்னை காரைக்கால், மாகி, ஏனாம் கல்லூரிகளிலும் உள்ளது. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்தது. பேராசிரியர்கள் பற்றாக்குறையை சரிசெய்யக் கோரி மாணவர்கள் போராட்டம் நடத்த துவங்கியுள்ளனர். அனைத்து அரசு கல்லூரி முதல்வர்கள் பங்கேற்ற கல்லூரி மேம்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் லாஸ்பேட்டையில் நேற்று நடந்தது. இதில் கல்வித்துறை உயர்கல்வித்துறை இயக்குநர் கரிகாலன், பாரதிதாசன் கல்லூரி முதல்வர் சூரியபிரகாஷ், இந்திராகாந்தி கலை அறிவியல் கல்லூரி முதல்வர் சிவமாதவன், தாகூர் கல்லூரி முதல்வர் தமிழரசிதமிழ்மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கல்லூரிகளில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை தற்காலிகமாக பகுதிநேர பேராசிரியர்களை நியமித்து நிரப்புவது, கல்லூரிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்