உள்ளூர் செய்திகள்

வள்ளுவர் பேரவை சார்பில் விருது வழங்கும் விழா

காரைக்குடி: காரைக்குடி வள்ளுவர் பேரவை சார்பில், விருது வழங்கும் விழா, கலைவாணி மெட்ரிக்., பள்ளியில் நடந்தது. இதில் 1,330 குறளையும் ஒப்புவித்த காரைக்குடி கலைவாணி மெட்ரிக் பள்ளி மாணவிகள் ஜோசி அபர்ணா, சண்முகபிரியா, லாவண்யா, ஸ்டனிஸ் செரின், திருப்பத்தூர் ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் மெட்ரிக் பள்ளி மாணவி சாருமதி ஆகிய ஐந்து பேருக்கு, திருக்குறள் செல்வி பட்டம் வழங்கப்பட்டது. அறத்துப்பால் 38 அதிகாரங்களை முடித்த, திருப்பத்தூர் ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் மெட்ரிக்., மேல்நிலை பள்ளி மாணவர்கள் ஜெய்பிரசாத், ராம்பிரசாத், சுபலெட்சுமி, எஸ்.எம்.எஸ்.வி.மேல்நிலை பள்ளி மாணவர் சூரிய பிரகாஷ், புதுவயல் கலைமகள் மெட்ரிக்., மேல்நிலை பள்ளி மாணவர் குமார், கலைவாணி வித்யாலயா பள்ளி மாணவி மதுமிதா ஆகியோருக்கு "அறம் விருது வழங்கப்பட்டது. வள்ளுவர் பேரவை கவுரவ தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். தலைவர் செயம்கொண்டான் வரவேற்றார். செயலாளர் பிரகாஷ் மணிமாறன், மகரிஷி வித்யா மந்திர் தமிழாசிரியர் குமாரசாமி பேசினர். ஊராட்சி தலைவர் மாங்குடி பரிசு வழங்கினார். காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி சங்கம் சார்பில், அரசு பொது தேர்வில் முதலிடம், இரண்டாமிடம் பெற்ற மாணவர்களுக்கு, விருது வழங்கும் விழா, கம்பன் மணிமண்டபத்தில் நடந்தது. சங்க தலைவர் நாகநாதன் வரவேற்றார். கிட் அன்ட் கிம் சேர்மன் அய்யப்பன் விருது வழங்கினார். துணை ஆளுனர் அமலன் அசோக், செயலாளர் நாவுக்கரசு, பட்டய தலைவர் தேனப்பன் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்