உள்ளூர் செய்திகள்

புதுமடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பொன்விழா கொண்டாட்டம்

மண்டபம்: புதுமடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 50 ஆண்டு நிறைவையொட்டி பொன்விழா கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியர்(பொறுப்பு) வின்சென்ட் ராஜசேகர் வரவற்றார். சொக்கலிங்கபுரம் தலைமை ஆசிரியர் ராவணன், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சிவகாமசுந்தரி(ஓய்வு), மாவட்ட கல்வி அலுவலர் சாந்தி, சென்னை மருத்துவக்கல்லூரி பேராசிரியர் டாக்டர் ஜாகிர் ஹூசைன், முகம்மது சதக் பாலிடெக்னிக் முதல்வர் அலாவுதீன், வணிகவரித்துறை இணை இயக்குனர் ரகுபதி ஆகியோர் வாழ்த்தி பேசினர். பொன்விழா ஆண்டு நினைவு மலரை, முதன்மைக்கல்வி அலுவலர் ஜெயகண்ணு வெளியிட, செய்யது அம்மாள் அறக்கட்டளை தலைவர் டாக்டர் பாபு அப்துல்லா பெற்றுக்கொண்டார். மதுரை வேளாண் துறை முதுநிலை மேலாளர் மீரான், முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ரங்கநாதன், ஜமாத்தார்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். தமிழாசிரியர் ஜெபமாலை நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்