உள்ளூர் செய்திகள்

அங்கன்வாடி மைய புதிய கட்டட திறப்பு விழா

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரியில், அங்கன்வாடி மைய புதிய கட்டட திறப்பு விழா நடந்தது. நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சியில், 17வது வார்டு அம்பேகத்கர் தெருவில், அங்கன்வாடி மையம் உள்ளது. இம்மையம், சில ஆண்டுகளாக சிதலமடைந்திருந்தது. இதையடுத்து, செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி, 2013 - -14ம் ஆண்டு, 4.5 லட்சம் ரூபாயும், பேரூராட்சி பொது நிதி, 90 ஆயிரம் ரூபாய் என, 5.40 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய கட்டடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த மாதம், அனைத்து பணிகளும் முடிந்தது. இதன் திறப்பு விழா, நேற்று முன்தினம் நடந்தது. பேரூராட்சி தலைவர் தண்டபாணி தலைமை தாங்கினார். செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், கட்டடத்தை திறந்து வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்