உள்ளூர் செய்திகள்

அண்ணாமலை பல்கலையில் மூன்று புதிய தொழிற்கல்வி படிப்புகள்

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில், நடப்பு கல்வி ஆண்டு, கேட்ரிங் டெக்னாலஜி உள்ளிட்ட மூன்று புதிய தொழிற்கல்வி படிப்புகள் துவங்கப்பட்டுள்ளன. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக கெமிக்கல் இன்ஜினியரிங் துறையில் கேட்ரிங் டெக்னாலஜி, ஓட்டல் மேனேஜ்மெண்ட் பாட பிரிவுகளும், இன்ஜினியரிங் இன்ஸ்ட்ருமெண்டேஷன் துறையில், ஹாஸ்பிட்டல் இன்ஸ்ட்ருமெண்டேஷன் மற்றும் மேனேஜ்மெண்ட் பாடப்பிரிவுகள் இந்த கல்வி ஆண்டு முதல் துவங்கப்பட்டுள்ளது. புதிய தொழிற்கல்வி படிப்புகளுக்கு, பல்கலைக்கழக மானியக் குழு, 1.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. புதிய பாடப் பிரிவுகளில் சேர பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு பாடப்பிரிவிலும், தலா, 50 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இதற்கான விண்ணப்பம், பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்தில் விற்பனை செய்யப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், வரும் 15ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும். இந்தத் தொழிற்கல்வி பாட வகுப்புகள் பல்கலை, தொழிற்துறையினருடன் இணைந்து நடத்தப்படுவதால், போதிய செய்முறை பயிற்சி அளிக்கப்படுகிறது என, பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்