உள்ளூர் செய்திகள்

இடிந்து விழும் நிலையில் அரசுப் பள்ளி கட்டடம்

கமுதி: கமுதி அருகே நகரத்தார்குறிச்சி அரசுப் பள்ளி கட்டடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 70க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். புதிய வகுப்பறை கட்டடம் சில ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. ஒரு சில ஆண்டுகளிலேயே விரிசல் விழுந்தது. கட்டடத்தின் முன்புறம் உள்ள சிலாப் இடிந்து விழத் தொடங்கியது. இதுகுறித்து அதிகாரிகளிடம் ஆசிரியர்கள் முறையிட்டனர். நடவடிக்கை எடுக்காத நிலையில், ஆசிரியர்களே முள்வேலி அமைத்து கட்டட பயன்பாட்டை தவிர்த்தனர். தற்போது அக்கட்டடத்தை பூட்டி விட்டு பள்ளி வளாகத்தில் உள்ள பழைய ஓட்டுக் கட்டடத்திற்கு மாணவர்களை மாற்றி உள்ளனர். மாணவர்கள், நெருக்கடியில் கல்வி கற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்