உள்ளூர் செய்திகள்

முதுகுளத்தூர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் வட்டார விளையாட்டு போட்டிகள்

முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், வட்டார விளையாட்டு போட்டிகள், கல்வி மாவட்ட அதிகாரி பழனியாண்டி தலைமையில் நடந்தது. பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி மாணவர் அருண்குமார் (14 வயதுக்கு உட்பட்டோர்), பிரதீப் (17 வயது), சாயல்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் தமிழ்செல்வன் (19 வயது) சாம்பியன் பட்டம் வென்றனர். கிடாத்திருக்கை அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி சிவரஞ்சனி (14 வயது), ஆப்பனூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி நதியா (17 வயது), முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி திருச்செல்வி (19 வயது) சாம்பியன் பட்டம் வென்றனர். மாணவர் பிரிவில் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி, மாணவிகள் பிரிவில் சாயல்குடி அரசு மேல்நிலைப்பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்