பள்ளி வளாகத்தில் குப்பை அள்ளும் பணியில் மாணவர்கள்!
பேரம்பாக்கம்: பேரம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவர்கள் பள்ளி வளாகத்தில் குப்பை அள்ளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடம்பத்துார் ஒன்றியம், பேரம்பாக்கத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில், 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், நேற்று, காலை 11:00 மணியளவில், பள்ளி ஆசிரியர் மேற்பார்வையின் கீழ், 8ம் வகுப்பு படிக்கும், 10 மாணவர்களை கொண்டு, பள்ளி வளாகத்தில் குப்பை அள்ளும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதனால், இந்த மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது.மேலும், பள்ளிக்கு கல்வி கற்க வரும் மாணவர்களை, பள்ளிகளில் துப்புரவு பணி மற்றும் பல பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது என, அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், ஆசிரியர் ஒருவர் மேற்பார்வையின் கீழ் பணி மேற்கொள்வது பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.