சிவில் சர்வீஸ் பிரிலிமினரி தேர்வு முடிவுகள் விரைவில்?
புதுடில்லி: சிவில் சர்வீஸ் பிரிலிமினரி தேர்வு முடிவுகள், விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பிட்டு எந்தத் தேதியில் வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கவில்லை என்றாலும், அம்முடிவுகள் விரைவில் வெளியாகும் என்றே தகவல்கள் கூறுகின்றன. www.upsc.gov.in என்ற இணையதளத்தில் முடிவுகளை அறியலாம். சிவில் சர்வீஸ் பிரிலிமினரி தேர்வு, தலா 200 மதிப்பெண்களைக் கொண்ட 2 தாள்களைக் கொண்டது. இத்தேர்வுக்கு மொத்தம் 9 லட்சத்து 44 ஆயிரத்து 926 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், admit card பதிவிறக்கம் செய்தவர்கள் வெறும் 6 லட்சத்து 80 ஆயிரத்து 455 பேர் மட்டுமே. அவர்களில் தேர்வெழுதியோர் எண்ணிக்கை 4.5 லட்சம் மட்டுமே. இந்தியாவின் 59 நகரங்களில், 2137 மையங்களில் தேர்வு நடைபெற்றது. அதேசமயம், கடந்தாண்டைவிட, இந்தாண்டு பிரிலிமினரி தேர்வெழுதியோர் எண்ணிக்கை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.