உள்ளூர் செய்திகள்

காந்திகிராம பல்கலையின் புதிய பதிவாளர் பி.பாலசுப்ரமணியன்!

திண்டுக்கல்: காந்திகிராம பல்கலையின் கணிதத்துறை பேராசிரியராக பணிபுரிந்த பி.பாலசுப்ரமணியன், பல்கலையின் 22 வது பதிவாளராக நேற்று பொறுப்பேற்றார். மூன்று ஆண்டுகள் வரை இப்பதவியில் இருப்பார். இவர் 1994ல் முனைவர் பட்டம் பெற்றார். கடந்த 1997 முதல் காந்திகிராம பல்கலையில் விரிவுரையாளர், பேராசிரியராக பணிபுரிந்துள்ளார். மலேசியா, கொரியா போன்ற நாடுகளில் சிறப்பு பேராசிரியராக பணிபுரிந்துள்ளார். தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை துணைவேந்தர் தேர்வுக் குழுவில் உறுப்பினராக இருந்துள்ளார். 176 ஆராய்ச்சி கட்டுரைகள், 9 நூல்கள் வெளியிட்டுள்ளார். கடந்த 2005ல் தமிழக அரசின் இளம் விஞ்ஞானி விருது பெற்றுள்ளார். அவர் கூறுகையில், "நிர்வாக நடைமுறைகள் எளிமைப்படுத்தப்படும். பல்கலை ஆசிரியர்கள், பணியாளர்கள் எந்தவொரு சூழ்நிலையிலும் எளிதில் என்னை அணுகலாம். புதிய ஆராய்ச்சி திட்டங்களுக்கு ஊக்கம் அளிக்கப்படும்" என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்