கல்லுாரி கூடைபந்து போட்டியில் லயோலா கல்லுாரி சாம்பியன்
வேளச்சேரி: சென்னை பல்கலைக்கு உட்பட்ட ஏ மண்டல கல்லுாரி கூடைபந்து போட்டியில், லயோலா கல்லுாரி அணி, சாம்பியன் பட்டம் வென்றது. சென்னை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட, ஏ மண்டல கல்லுாரி அணிகள் பங்கேற்ற, கில் நினைவு கோப்பைக்கான கூடைபந்து போட்டி, வேளச்சேரி குருநானக் கல்லுாரி சார்பில், அதன் வளாகத்தில் நடந்தது. ஆண்கள் கூடைபந்து இறுதி போட்டியில், லயோலா கல்லுாரி அணி, 69-51 என்ற புள்ளி கணக்கில், இந்துஸ்தான் கலை கல்லுாரி அணியை வென்று சாம்பியன் பட்டம் பெற்றது.