உள்ளூர் செய்திகள்

மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கான பிரத்யேக ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சி!

சென்னை: தினமலர் சார்பாக, சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கான, பிரத்யேக ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி, சென்னை பல்கலைக்கழக, நூற்றாண்டு விழா கலையரங்கில் இன்று தொடங்குகிறது. இதில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, காலை 9 மணி மற்றும் மதியம் 1 மணி என இரண்டு பிரிவுகளாக இன்று(நவம்பர் 26) நடக்கிறது. பிளஸ் 2 மாணவர்களுக்கான நிகழ்ச்சி நாளை(நவம்பர் 27) நடக்கிறது. காலை 9 மணிக்கு அறிவியல் பிரிவு மாணவர்களுக்கும், மதியம் 1 மணிக்கு கலைப் பிரிவு மாணவர்களுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் ஆலோசனை வழங்கவுள்ளனர். முக்கிய வினாக்கள் அடங்கிய புத்தகம் இலவசமாக வழங்கப்படவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்