‘பெங்களூரு பல்கலையை பிரித்து கோலாரில் புதிய பல்கலை’
பெங்களூரு: ”பெங்களூரு பல்கலைக்கழகத்தை பிரித்து, கோலாரில் புதிய பல்கலைக்கழகம் அமைக்கப்படும்,” என, உயர்கல்வித்துறை அமைச்சர் தேஷ்பாண்டே தெரிவித்தார். கர்நாடகா சட்டசபையில், கேள்வி நேரத்தில், எம்.எல்.ஏ., ரமேஷ் குமார் கேள்விக்கு பதிலளித்து, அமைச்சர் தேஷ்பாண்டே கூறியதாவது: பெங்களூரு பல்கலைக்கழகத்தை பிரித்து, கோலார் நகரில், தலைமையிடமாகக் கொண்டு, சிக்பல்லாபூர், பெங்களூரு மாவட்டங்களை உட்படுத்திய புதிய பல்கலைக்கழகம் அமைக்க வல்லுர் குழு சிபாரிசு செய்துள்ளது. இதை செயல்படுத்த, அரசு விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளும். இவ்வாறு அவர் கூறினார்.