உள்ளூர் செய்திகள்

பழைய மாணவர்கள் கூட்டமைப்பின் முதல் சந்திப்பு கூட்டம்

சாத்தூர்: சாத்தூர் எஸ்.எச்.என்.எட்வர்டு மேல்நிலைப்பள்ளியில் 1976 ம் ஆண்டு முதல் 1983ம் ஆண்டு வரை படித்த பழைய மாணவர்கள் கூட்டமைப்பின் முதல் சந்திப்பு கூட்டம் பள்ளி வளாகத்தில் நடந்தது. பழைய மாணவர்களான வெங்கட்ராமன் எம்.எல்.ஏ., மாஜிஸ்திரேட்கள் நசீர்அஹமத், மாதவராமானுஜம், சண்டிகாரில் பணிபுரியும் விஞ்ஞானி மயில்ராஜ், கல்லூரி விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், அரசு பதவியில் பணிபுரிபவர்கள், தொழில் அதிபர்கள், கலந்து கொண்டனர். சந்திப்புக் கூட்டத்தின் நினைவாக பள்ளியின் வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. மறைந்த ஆசிரியர்கள் மற்றும் உடன் பயின்ற மாணவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. சுய அறிமுகத்துடன் தங்கள் நட்பை பகிர்ந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்