உள்ளூர் செய்திகள்

மண்டல அளவிலான அறிவியல் மற்றும் பொறியியல் கண்காட்சி

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரியில் மண்டல அளவிலான அறிவியல் மற்றும் பொறியியல் கண்காட்சி நடந்தது. இரண்டு நாள் நடந்த கண்காட்சியில் 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் 250-க்கும் மேற்பட்ட படைப்புகளை வைத்திருந்தனர். ஆண்டிபட்டி எஸ்.ரெங்கநாதபுரம் பத்மா ராமசாமி மெட்ரிக்.,பள்ளி முதல் பரிசும், உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி இரண்டாம் பரிசும், எழுமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மூன்றாம் பரிசும் பெற்றன. தேனி மேரிமாதா மெட்ரிக்.,பள்ளி ஆறுதல் பரிசு பெற்றது. கண்காட்சியில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்