கபடி போட்டியில் குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரி வெற்றி
கோவை: மாவட்ட அளவிலான கபடி போட்டியில் குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரி வெற்றி பெற்றது. சரவணம்பட்டி விசுவாசபுரம் குடியிருப்போர் நலச்சங்கம் ஆண்டுவிழாவை முன்னிட்டு, யுனிவர்சல் ஸ்கூல் ஆப் ஸ்போர்ட்ஸ் சார்பில், மாவட்ட அளவிலான கபடி போட்டி, விசுவாசபுரம் விளையாட்டு மைதானத்தில் நடந்தது. மாவட்ட அளவில், 20 அணிகள் போட்டியில் பங்கேற்றன. காலிறுதி முதல் போட்டியில், குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரி 26-12 புள்ளி கணக்கில் இண்டஸ் இன்ஜி., கல்லுாரியையும்; இரண்டாவது காலிறுதி போட்டியில், கோவை தொழில்நுட்ப கல்லுாரி 27-18 என்ற புள்ளி கணக்கில் கே.டி.வி.ஆர்., இன்ஜி., கல்லுாரியையும் வென்றன. 3வது காலிறுதி போட்டியில், புரபசனல் தொழில்நுட்ப கல்லுாரி 42-25 புள்ளி கணக்கில் பார்க் தொழில்நுட்ப கல்லுாரியையும்; 4வது போட்டியில், குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரி-பி அணி 37-35 புள்ளி கணக்கில் கற்பகம் இன்ஜி., கல்லுாரியையும் வென்றன.