உள்ளூர் செய்திகள்

கூடைபந்து போட்டியில் ஜேப்பியார் தொழில்நுட்ப கல்லுாரி சாம்பியன்

தாம்பரம்: பொறியியல் கல்லுாரிகளுக்கான கூடைபந்து போட்டியில், ஜேப்பியார் தொழில்நுட்ப கல்லுாரி அணி சாம்பியன் பட்டம் வென்றது. ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லுாரி சார்பில், 35வது, சாய்ராம் டைஸ் 2015 பொறியியல் கல்லுாரிகளுக்கான விளையாட்டு போட்டிகள், அதன் வளாகத்தில் நடந்து வருகின்றன. கூடைபந்து போட்டியில், 39 கல்லுாரி மகளிர் அணிகள் மோதின. இறுதி போட்டியில், ஜேப்பியார் தொழில்நுட்ப பொறியியல் கல்லுாரி அணி, 58-28 என்ற புள்ளிக்கணக்கில், எஸ்.எஸ்.என்., பொறியியல் கல்லுாரி அணியை வீழ்த்தி, சாம்பியன் பட்டம் வென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்