உள்ளூர் செய்திகள்

ஆய்வோம் அறிவோம் - ‘எத்திகல் ஹேக்கிங்’

2015ம் ஆண்டின் இறுதிக்குள், இந்தியாவில் இன்டர்நெட் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 30 கோடியைத் தொட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம், அமெரிக்காவை பின்னுக்குதள்ளி இரண்டாம் இடத்திற்கு முன்னேறிவிடும். நிபுணர்களின் தேவை இன்டர்நெட் பயன்பாட்டைப்போல், சைபர் குற்றங்களும் வேகமாய் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. ஆண்டுதோறும், இந்தியாவில் மட்டும் 4.2 கோடி சைபர் குற்றங்கள் நடக்கின்றன. இதனால், 8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு, பொருளாதார இழப்பு ஏற்படுவதாக ‘நார்டன்’ நிறுவன ஆய்வு தெரிவிக்கிறது. எனவே, தொழில்நுட்பங்களை பாதுகாப்பான முறையில் பயன்படுத்துவது, இன்றைய நிலையில், ஒவ்வொரு நிறுவனத்திற்கும் பெரிய சவாலாக உள்ளது.  இந்த சவாலை எதிர்கொள்ள 4.7 லட்சம் நிபுணர்கள் தேவைப்படுகின்றனர். ஹேக்கர் - எத்திகல் ஹேக்கர்? கம்ப்யூட்டர் நெட்வொர்க்கில் உள்ள ஓட்டைகளை கண்டறிந்து, தகவல்களை திருடுதல் மற்றும் தவறாகப் பயன்படுத்துதல் போன்ற முறைகேடான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை ‘ஹேக்கர்’ என்கிறோம். நெட்வொர்க் கட்டமைப்பை நன்கு ஆராய்ந்து, ’ஹேக்கர்’களின் தாக்குதலுக்கு உள்ளாகக்கூடிய அம்சங்களை கண்டறிந்து, அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பவர் ‘எத்திகல் ஹேக்கர்’ (சைபர் குற்றத் தடுப்பு நிபுணர்). கம்ப்யூட்டர் நெட்வொர்க் அமைப்பின் குறைபாடுகளைக் கண்டறிந்து, களைந்து, அதை மேம்படுத்தும் அதிகாரம் இவருக்கு உண்டு. தேவைப்படும் திறன் மற்றும் வாய்ப்புகள் நிறுவனங்களின் ஐ.டி., அமைப்பை பாதுகாக்கும் வகையில், ஹேக்கிங் நுட்பங்கள், செயல்முறைகள், உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை அறிவது மிக அவசியம். இதற்கான சிறப்பு படிப்பை, பிரபல இசி-கவுன்சில் உடன் இணைந்து என்.ஐ.ஐ.டி., வழங்குகிறது. இவர்களுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் அதிக பணி வாய்ப்புகள் உள்ளன. கன்சல்டன்ட் முறையிலும் அதிகம் வருமானம் பெற முடியும்.                                  -சிவன் பார்கவா, குழு தலைவர் (ஸ்கில்ஸ் அன்ட் கேரியர்ஸ் குரூப்), என்.ஐ.ஐ.டி., லிமிடெட்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்