உள்ளூர் செய்திகள்

‘வனக்கல்லூரி மாணவர்கள் கோரிக்கையை அரசு பரிசீலிக்கும்’: அமைச்சர்

சென்னை: ”வனக்கல்லூரி மாணவர்களின் கோரிக்கையை, அரசு கனிவுடன் பரிசீலிக்கும்,” என, வேளாண் துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார். மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மாணவர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களுடைய கோரிக்கையை, அரசு பரிசீலிக்க வேண்டும் என, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபையில் வலியுறுத்தினர். அதற்கு பதில் அளித்து, அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது: வனக்கல்லூரி மாணவர்கள் பிரதிநிதிகளை, நேற்றுமுன்தினம் மாலை, சென்னைக்கு வரவழைத்து, நானும், வனத்துறை அமைச்சரும், அதிகாரிகளும் பேசினோம். அவர்கள் கோரிக்கையை எடுத்துரைத்தனர். அவர்களின் கோரிக்கையை, அரசு கனிவுடன் பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு, அமைச்சர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்