அனைத்து மத்திய பல்கலையிலும் வை-பை வசதி
புதுடில்லி: தகவல் தொழில்நுட்ப துறை மூலம் கல்வி எனும் திட்டத்தின் கீழ், அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் வை-பை வசதி ஏற்படுத்தி தரப்படும் என மத்திய மனித வளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். அலகாபாத் பல்கலை, வடகிழக்கு பல்கலை ஆகியவற்றில் ஏற்கெனவே இந்த வசதி செய்யப்பட்டுள்ளது எனவும், மீதமுள்ள 38 மத்திய பல்கலையிலும் ரூ. 335.85 கோடி செலவில் வை-பை வசதி ஏற்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.