உள்ளூர் செய்திகள்

போலி ஜாதி சான்றிதழ் கொடுத்து ஆசிரியர் பணி!

தர்மபுரி: போலி ஜாதி சான்றிதழ் கொடுத்து, ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்களை, வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என, தலித் உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர், தர்மபுரி கலெக்டர் விவேகானந்தனிடம் மனு கொடுத்தனர். மனுவில் கூறியிருப்பதாவது: போலி ஜாதி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தது மற்றும் அதற்கு உதவியதாக, தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு, பாரதியார் நகரை சேர்ந்த முனியப்பன், கிருஷ்ணகிரி கூச்சனுரை சேர்ந்த செந்தில்குமார், கிருஷ்ணகிரி திருவள்ளூவர் நகரை சேர்ந்த ராஜேந்திரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், கடந்த, 1990 முதல் பணியில் சேர்ந்த, இடைநிலை ஆசிரியர்களின் கல்வி சான்றிதழ்களை, கல்வித்துறையினர் சரி பார்த்து வருகின்றனர். ஆதிதிராவிடர் இன மக்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் வகையில், அவர்களின் ஜாதி சான்றிதழ்களை போலியாக கொடுத்து, பணியில் சேர்ந்து கைது செய்யப்பட்டவர்களை, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்