உள்ளூர் செய்திகள்

அரசு மேல்நிலை பள்ளியில் அபாய மரங்களால் ஆபத்து

கோத்தகிரி: கோத்தகிரி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள, கற்பூர மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கோத்தகிரி அரசு மேல்நிலைப் பள்ளியில், 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.பள்ளி அருகே, ஆசிரியர் பயற்சி மற்றும் கல்வி நிறுவனம் (டயட்), தாலுகா அலுவலகம், நீதிமன்றம், பி.எஸ்.என்.எல்., அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உட்பட குடியிருப்புகளும் அதிகளவில் உள்ளன. பள்ளி வளாகத்தில் உள்ள, 20க்கும் மேற்பட்ட கற்பூர மரங்கள், போதிய வேர்ப்பிடிப்பு இல்லாமல், சாய்ந்த நிலையில் காணப்படுகின்றன. மழையுடன், பலத்த காற்று வீசும் பட்சத்தில், மரங்கள் விழுந்து, அசம்பாவிதம் நடைபெற வாய்ப்புள்ளது. இந்த மரங்களை அகற்ற, பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, அசம்பாவிதம் நடப்பதற்கு முன்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்