உள்ளூர் செய்திகள்

ஸ்காட் கல்லூரி முன்னாள் மாணவர் சங்க சந்திப்பு

மதுரை: நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லுாரி முன்னாள் மாணவர்கள் சங்க மதுரை கிளையின் நிர்வாகக்குழு கூட்டம், மதுரை தினமலர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு தினமலர் வெளியீட்டாளர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி தலைமை வகித்தார்.மதுரை கிளை வருடாந்திர சந்திப்பு விழாவை ஏப்., 17ம் தேதி, மாலை 6:00 மணிக்கு தினமலர் அலுவலக வளாகத்தில் நடத்துவது, இரு மாதங்களுக்கு ஒருமுறை, மூன்றாவது ஞாயிறு மாலை 6 மணிக்கு, தினமலர் அலுவலகத்தில் கூட்டம் நடத்துவது, மாணவர்களிடையே தனிநபர் மேம்பாடு, கல்வி மதிப்பு, ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை வலியுறுத்தும் நிகழ்ச்சிகளை நடத்துவதென்று முடிவு செய்யப்பட்டது.உறுப்பினர்களாக விரும்புவோர் தொடர்பு கொள்ளவும். 98940 09495; 98421 68136.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்