உள்ளூர் செய்திகள்

மணக்குள விநாயகர் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்

புதுச்சேரி: கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலாஜி கல்லுாரியில், சென்னை எச்.சி.எல். டேலண்ட் கேர் நிறுவனம் சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. எஸ் பேங்க் நிறுவனத்திற்காக, இக் கல்லுாரியில் 2013, 2014ம் ஆண்டில் படிப்பை முடித்த இளநிலை மற்றும் முதுநிலை பட்டதாரிகள், எச்.சி.எல்., டேலண்ட் கேர் நிறுவனத்திற்கு பொறியாளர்கள் தேர்வு செய்யப் பட்டனர். முகாமில், நிறுவன மனித வள மேலாளர் ஸ்ரீவத்சன் மற்றும் குழுவினர் பங்கேற்று, நிறுவனத்தின் விவரங்கள், நிறுவனத்தில் வேலை செய்வதற்கு உண்டான சூழல், எதிர்கால குறிக்கோள்கள், சம்பளம் உள்ளிட்ட விபரங்களையும் விளக்கினார். நிகழ்ச்சிக்கு கல்லுாரி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன், கல்லுாரி துணைத் தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி ஆகியோர் தலைமை தாங்கினர்.முகாமை மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலாஜி கல்லுாரி முதல்வர் டாக்டர் மலர்க்கண் தொடங்கி வைத்தார். துறை சார்ந்த வேலை வாய்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர். முகாமில் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலாஜி, மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரி, மயிலம் பொறியியல் கல்லுாரி மற்றும் புதுச்சேரி பல்கலைக் கழக இணைப்பு பெற்ற கல்லுாரிகளில் இருந்து நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்