தேசிய கால்பந்து போட்டி பள்ளி மாணவர் தேர்வு
ஊட்டி: ஊட்டி கிரசன்ட் மேல்நிலைப்பள்ளி மாணவர், தேசிய போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.டில்லியில், ஏப்ரல் 10ல் இருந்து,23ம் தேதி வரை, 37வது தேசிய சப்--ஜூனியர் கால்பந்து போட்டிகள் நடக்க உள்ளது. இந்த போட்டியில் விளையாட, ஊட்டி கிரசன்ட் பள்ளி, 11ம் வகுப்பு மாணவர் சுகித் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாகப்பட்டினத்தில் நடந்து வரும் சிறப்பு முகாமில் பங்கேற்க சென்ற அவருக்கு, பள்ளி நிர்வாகம் பாராட்டு தெரிவித்துள்ளது.