உள்ளூர் செய்திகள்

கட்டட தொழிலாளி மகள் மாநில அளவில் சாதனை

கோவை: அரசுப் பள்ளிகள் அளவில், கோவை மாணவி, மாநில அளவில் இரண்டாமிடம் பிடித்தார்.கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதியைச் சேர்ந்த, கட்டட தொழிலாளி காளிமுத்து - ஈஸ்வரி தம்பதியின் மகள் சிவசத்யா; இங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 தேர்வெழுதினார். இவர், தமிழ் 193, ஆங்கிலம் 187, புள்ளியியல் மற்றும் பொருளியல் 200, கணக்கு பதிவியல் மற்றும் வணிகவியலில், 199 என, 1,178 மதிப்பெண்ணுடன், அரசு பள்ளிகள் அளவில், மாநிலத்தில் இரண்டாம் இடமும், மாவட்டத்தில் முதலிடமும் பெற்றுள்ளார்.மாணவி சிவசத்யா கூறுகையில், வறுமையிலும், என் பெற்றோர், படிப்புக்கு முக்கியத்துவம் அளித்தனர். அவர்களை மகிழ்விக்க வேண்டும் என்பதற்காகவே சிறப்பாக படித்தேன்; சாதித்தது மகிழ்ச்சி. பள்ளி ஆசிரியர்கள், சக தோழிகளின் ஒத்துழைப்பு, என் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கிறது. சி.ஏ., படிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்