பி.டி. உதவியாளர் பதவி மூப்பு பட்டியல் தயார்
கோவை: அனைத்து பாடப் பிரிவுக்கான பி.டி. அசிஸ்டென்ட் பதவி காலியிடங்களை நிரப்புவது தொடர்பாக, கோவை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இருந்து சென்னை ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு பதவி மூப்பு பட்டியல் அனுப்பப்படவுள்ளது. கல்வித் தகுதி: பி.ஏ., பி.எட்., (உரிய பாடப் பிரிவில்) படித்தவர்கள் தகுதி உடையவர்கள். எஸ்.சி., எஸ்.டி., வகுப்பினர், மிகவும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பிற்பட்ட வகுப்பினர், பொது பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை. ஆதரவற்ற விதவை, கலப்பு மணம் புரிந்தவர்கள், சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசு, தமிழ் மொழிக்காவலரின் வாரிசு, முன்னாள் படை வீரரை சார்ந்தவர்கள், முன்னாள் படை வீரர், உடல் ஊனமுற்றோர், பர்மா, இலங்கை அகதிகள், அரசுக்கு நிலம் கொடுத்தோர், அனாதை, முன்னாள் கணக்கெடுப்புத்துறை பணியாளர்கள், முன்னாள் அரசுப் பணியாளர்கள், 2009 செப்., 15 வரை பதிவு செய்துள்ளவர்கள், தெலுங்கு, மலையாளம், உருது வழி அனைத்துப் பாடங்களை படித்த அனைத்து பிரிவினரும் தங்கள் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதை பரிசோதித்துக் கொள்ளலாம். அனைத்து அசல் கல்விச் சான்றிதழ்களுடன் அக்., 13ல் காலை 11.00 மணிக்கு கோவை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் உள்ள பதிவு மூப்பு பட்டியலை நேரில் கண்டு உறுதி செய்து கொள்ளலாம். இத்தகவலை, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.