உள்ளூர் செய்திகள்

அரசு மேல்நிலை பள்ளியில் கட்டணம் வசூலிப்பதாக புகார்

கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவர்களிடம் கட்டணம் வசூல் செய்வதாக காங்., கட்சி புகார் தெரிவித்துள்ளது.காங்., கட்சி மாநில பொதுச்செயலாளர் கனகசபாபதி அறிக்கை: கொரோனா தொற்று பரவல் காலத்தில், பொதுமக்கள் அன்றாட உணவுக்கே மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு, பள்ளிக்கல்விதுறை அமைச்சர், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் போது எவ்வித கட்டணங்களும் வசூல் செய்யக்கூடாது என உத்தரவிட்டுள்ளார். ஆனால், கிணத்துக்கடவு அரசு மேல்நிலை பள்ளியில், 6 - 10ம் வகுப்பு வரை சேரும் மாணவர்களிடம், 50 ரூபாயும், பிளஸ் 1 வகுப்பில் சேரும் மாணவர்களிடம், 250 ரூபாயும் கட்டணமாக வசூல் செய்கின்றனர். இதற்கு, எவ்வித ரசீதும் வழங்குவதில்லை. இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், &'&'மாணவர் சேர்க்கையின் போது, பெற்றோர் ஆசிரியர் சங்கத்துக்கு, 50 ரூபாயும், பிளஸ் 1 மாணவர்களில் கணினி பாடப்பிரிவில் சேர்பவர்களிடம் கணினி கட்டணமாக, 200 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்கவில்லை,&'&' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்