நவோதயா பள்ளிகளைத் தொடங்க ஐ.ஐ.டி., இயக்குநர் வேண்டுகோள்
தென் மாநிலங்களில் உள்ள நவோதயா பள்ளிக் குழந்தைகளின் மண்டல அறிவியல் மாநாட்டில் பேசிய அவர், மத்திய அரசின் நவோதயா பள்ளிகள் மூலம் ஏழை, எளிய குழந்தைகளுக்குத் தரமான கல்வி வாய்ப்புகளுக்கான சாத்தியங்கள் கிடைக்கும் என்றார். தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் இல்லை என கேள்விப்பட்டேன். இந்த முறையில் பல சாதகமான பலன்கள் கிடைக்கும். நவோதயா பள்ளிகளைத் தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விரும்புகிறோம் என்று பேராசிரியர் அனந்த் பேசும்போது தெரிவித்தார்.