மதுரை பள்ளிக்கு நிதி திரட்டும் பாலிவுட் நடிகை
மும்பை: பாலிவுட் நடிகை கத்ரினா கைப், 37, சமூக வலைதளத்தில் நேற்று ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார்.அதில், ஏழை குழந்தைகளுக்கு குறைந்த செலவில் கல்வி அளிக்கும், மதுரை, &'மவுன்டன் வியூ&' பள்ளியில், அவரது தாயார் நடத்தும் தொண்டு நிறுவனம் சார்பில் வகுப்பறைகள் கட்டப்பட்டு வருவதாகவும், அதற்கு பொதுமக்களும் நிதி உதவி அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.