உள்ளூர் செய்திகள்

விளையாட்டு மூலம் பாடம் லுாதியானா சிறுமிக்கு விருது

லுாதியானா: கம்ப்யூட்டர்களில் விளையாடுவதற்கு பயன்படுத்தப்படும், &'மைன்கிராப்ட்&' என்ற மென்பொருள் மூலம், பாடங்களை உருவாக்கியுள்ள, பஞ்சாப் மாநிலம் லுாதியானாவைச் சேர்ந்த, மாணவி நாம்யா ஜோஷி, 14, இந்தாண்டுக்கான, &'பால புரஸ்கார்&' விருது பெற்றுள்ளார்.குடியரசு தினத்தின்போது, விளையாட்டு, கலை, சமூக சேவை, வீர செயல் உட்பட, பல்வேறு துறைகளில் சாதனை படைத்துள்ள, 18 வயதுக்குட்பட்ட சிறுவர் - சிறுமியருக்கு, பால புரஸ்கார் விருது வழங்கப்படுகிறது. இந்தாண்டு, 32 குழந்தைகளுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. அவர்களுடன், பிரதமர், நரேந்திர மோடி, &'வீடியோ கான்பரன்ஸ்&' முறையில் உரையாற்றினார். இந்த விருது, லுாதியானாவைச் சேர்ந்த, நியாம் ஜோஷிக்கு வழங்கப்பட்டது.புதுமை கண்டுபிடிப்புக்கான பிரிவின் கீழ் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. கம்ப்யூட்டர்களில் விளையாடுவதற்கு பயன்படுத்தப்படும், மைன்கிராப்ட் என்ற மென்பொருள் மூலம், பாடங்களை விளையாட்டுடன் கற்கும் முறையை அவர் உருவாக்கியுள்ளார். தகவல் தொழில்நுட்ப நிபுணரான தாயின் கம்ப்யூட்டரில் இந்த மென்பொருளை பார்த்து, அதன் அடிப்படையை புரிந்து கொண்டு, அனைவரும் சுலபமாக கற்கும் வகையில், புதிய பாடங்களை அவர் உருவாக்கினார்.இவருடைய இந்த கண்டுபிடிப்பை, &'மைக்ரோசாப்ட்&' நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான, இந்தியாவை பூர்வீகமாக உடைய, சத்யா நாதெள்ளா ஏற்கனவே பாராட்டியுள்ளார். அந்த நிறுவனத்தின் கற்பிப்பாளராகவும் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்