உள்ளூர் செய்திகள்

கலா உத்சவ் போட்டியில் பிரசிடென்சி பள்ளி முதலிடம்

புதுச்சேரி - கலா உத்சவ் போட்டியில் தேசிய அளவில் புதுச்சேரி பிரசிடென்சி பள்ளி மாணவர் விக்னேஷ் முதலிடம் பிடித்தார்.மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களுக்கு கலா உத்சவ் போட்டிகளை நடத்தி வருகிறது. 2020-21 கல்வியாண்டில் நடந்த கலா உத்சவ் போட்டியில் தேசிய அளவில் ஆறுபோட்டிகளில் பிரசிடென்சி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.இதில், பிரசிடென்சி பள்ளி 10ம் வகுப்பு மாணவர் விக்னேஷ், பாரம்பரிய பொம்மைகள் செய்தல் போட்டியில் கலந்து கொண்டு தேசிய அளவில் முதல் இடம் பிடித்தார். கலா உத்சவ் போட்டியில் தேசிய அளவில் சாதித்த மாணவர் விக்னேைஷ முதல்வர் நாராயணசாமி, கல்வித் துறை இயக்குனர் ருத்ரகவுடு, பிரசிடென்சி பள்ளி தாளாளர், முதல்வர், துணை முதல்வர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்