போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி: கைவிட, முடிவு
பெங்களூரு: அரசுப்பணியில் அமர, கனவு காணும் ஏழை மாணவர்களுக்கு, பட்டப்படிப்புடன், போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி அளிப்பதாக அறிவித்திருந்த பெங்களூரு மாநகராட்சி, இப்போது அந்த திட்டத்தை கைவிட, முடிவு செய்துள்ளது. இதனால், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.ஏழை மாணவர்களின் நலனுக்காக, மூன்றாண்டு பட்டப்படிப்பு, போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கும் திட்டத்தை, பெங்களூரு மாநகராட்சி அறிவித்திருந்தது. இத்திட்டத்திற்கு, 2020, நவம்பரில், விண்ணப்பம் கோரியது. இதன்படி, பி.ஏ., - பி.காம்., பட்டப்படிப்பு படிக்க விரும்பிய மாணவர்கள், விண்ணப்பம் தாக்கல் செய்தனர். விண்ணப்பித்த மாணவர்கள் அனைவரும், மாநகராட்சியில், துப்புரவு தொழிலாளர்கள், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினரின் பிள்ளைகள் ஆவர்.மாணவர்களின் விண்ணப்பங்களை, ஆய்வு செய்து டிச., இரண்டாவது வாரம், தகுதியான மாணவர்களின் பட்டியல் வெளியிட்டிருக்க வேண்டும். நான்காவது வாரம், சீட்கள் வழங்க, கவுன்சிலிங் நடத்தியிருக்க வேண்டும். ஆனால், பல முறை மாணவர்கள், மாநகராட்சி அலுவலகத்துக்கு சென்று, அதிகாரிகளிடம் விசாரித்தும், எந்த பதிலும் கிடைக்கவில்லை.பி.ஏ., - பி.காம்., படிப்புகளுக்கு மட்டும், விண்ணப்பம் கோரியதால், சில மாணவர்கள், மாநகராட்சியில் அளித்தனர்.இந்நிலையில் இத்திட்டத்தையே கைவிட, மாநகராட்சி ஆலோசிப்பதால், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மாநகராட்சி சிறப்பு கமிஷனர், ரவீந்திரா கூறுகையில், &'&'இலவச கல்வியளிக்கும் திட்டத்துக்கு, சில மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், தற்போதைக்கு திட்டத்தை நிறுத்த, மாநகராட்சி ஆலோசிக்கிறது. &'&'விண்ணப்பித்த மாணவர்களுக்கு, என்ன செய்வது என ஆலோசிக்கிறோம். விரைவில் முடிவு செய்வோம்,&'&' என்றார்.