உள்ளூர் செய்திகள்

எம்.டெக்., பயோடெக் படிப்பு: தொடர ஐகோர்ட் அறிவுரை

சென்னை: நிதிப் பிரச்னையால், இரண்டு பாடங்களையும் ரத்து செய்யக்கூடாது. அரசின் உதவியுடன், இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.சென்னையை சேர்ந்த, மாணவி ஆர்.சித்ரா தாக்கல் செய்த மனு:அண்ணா பல்கலையின், &'பயோ டெக்னாலஜி&' மையம் நடத்தும், எம்.டெக்., படிப்புகளுக்கு விண்ணப்பித்துள்ளேன்.தற்போது, இந்த இரண்டு முதுநிலை படிப்புகளையும் நடத்தவில்லை என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. மாணவர்கள் சேர்க்கையில், எந்த இடஒதுக்கீட்டை பின்பற்றுவது என்பதில் ஏற்பட்ட பிரச்னையால், இரண்டு முதுநிலை படிப்புகளையும் ரத்து செய்துள்ளனர்.49.5 சதவீத ஒதுக்கீட்டை பின்பற்றும்படி, மத்திய அரசும், 69 சதவீத ஒதுக்கீட்டை பின்பற்ற, மாநில அரசும் உத்தரவிட்டுள்ளன.மத்திய - மாநில அரசுகளுக்கு இடையேயான போட்டியால், மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, இரண்டு எம்.டெக்., படிப்புகளிலும், மாணவர்கள் சேர்க்கையை ரத்து செய்த, அண்ணா பல்கலை உத்தரவை, ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.இதேபோன்று, குழலி என்ற மாணவியும் மனு தாக்கல் செய்தார்.மனுக்கள், நீதிபதி புகழேந்தி முன், மீண்டும் விசாரணைக்கு வந்தன.அண்ணா பல்கலை சார்பில், வழக்கறிஞர் விஜயகுமார் ஆஜராகி, &'&'இத்தனை ஆண்டுகளாக, மத்திய அரசே மாணவர்களை தேர்வு செய்து, பட்டியலை அனுப்பும். &'&'இந்த முறை, மாணவர்களை தேர்வு செய்து கொள்ளவும், மத்திய அரசின் ஒதுக்கீட்டை பின்பற்றவும், அண்ணா பல்கலையிடம், மத்திய அரசு கூறி விட்டது,&'&' என்றார்.இதையடுத்து, நீதிபதி புகழேந்தி, &'&'இத்தனை ஆண்டுகளாக நடத்தி வந்த படிப்புகளை, தற்போது நிறுத்தி வைத்தது நியாயமற்றது; நிதி பிரச்னைக்காக, படிப்புகளை நிறுத்தக் கூடாது. &'&'ஒரு வேளை, மத்திய அரசு நிதி உதவி அளிக்கவில்லை என்றால், மாநில அரசு ஈடுசெய்ய வேண்டும். அரசின் உதவியுடன், இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்,&'&' என்றார்.மாணவி சார்பில் வழக்கறிஞர் சரவணன் ஆஜராகி, &'&'அண்ணா பல்கலை முடிவால், மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. &'&'எந்த ஒதுக்கீடாக இருந்தாலும், எங்களை பொறுத்தவரை, படிப்புகளை நிறுத்தக் கூடாது,&'&' என்றார்.அரசு தரப்பில், சிறப்பு பிளீடர் மனோகரன் ஆஜராகி, அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க, அவகாசம் கோரினார். இதையடுத்து, இந்தப் பிரச்னையை தீர்ப்பதற்கான தீர்வோடு வரும்படி, மத்திய - மாநில அரசுகள் மற்றும் அண்ணா பல்கலைக்கு அறிவுறுத்தி, விசாரணையை, வரும், 8ம் தேதிக்கு, நீதிபதி புகழேந்தி தள்ளி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்