உள்ளூர் செய்திகள்

கேரளாவில் ஒரு அரசு பள்ளி மட்டும் திறப்பு

மூணாறு: கேரளாவில் மாணவர்களுக்கு &'ஆன்லைன்&' வகுப்புகள் துவங்கிய நிலையில் மூணாறு அருகே மலைவாழ் மக்கள் வசிக்கும் இடமலைகுடி ஊராட்சியில் அரசு நடுநிலைப்பள்ளி மட்டும்திறக்கப்பட்டது.மாநிலத்தில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை &'ஆன் லைன்&' வகுப்புகள் நேற்று முதல் துவங்கிய நிலையில் மூணாறு அருகே இடமலைகுடி ஊராட்சியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியை திறக்க பள்ளி கல்விதுறை அனுமதித்தது.அங்கு இதுவரை யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. சந்தேகத்தின் அடிப்டையில் கடந்த மாதம் சுகாதாரத்துறையினர் நடத்திய பரிசோதனையில் கொரோனா கண்டறியப்படவில்லை.ஊராட்சியில் தொலைத் தொடர்பு வசதி இல்லை என்பதால் மாணவர்களின் நலன் கருதி சொசைட்டிகுடியில் உள்ள நடுநிலைப்பள்ளி திறக்கப்பட்டது. அங்கு102 மாணவர்கள் படித்து வரும் நிலையில், நடப்பு கல்வியாண்டில் புதிதாக 9 பேர் சேர்ந்துள்ளனர். பள்ளியில் பணிபுரியும் 4 ஆசிரியர்களும் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடதக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்