பல்கலையை நிர்வகிக்க புதிய குழு அமைத்து உத்தரவு
சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக துணைவேந்தர் பதவி காலம் முடிவதால், சிண்டிகேட் உறுப்பினர்கள் இருவர் நிர்வாக குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.கடலுார் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் முருகேசன் பதவி காலம் நாளை 3ம் தேதியுடன் முடிகிறது. இதையொட்டி புதிய துணைவேந்தர் நியமனம் குறித்து சிண்டிகேட் உறுப்பினர்களின் கலந்தாய்வு கூட்டம் தமிழக உயர்கல்வித் துறை செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் காணொலி வாயிலாக நடந்தது.இதில், புதிய துணைவேந்தர் நியமிக்கும் வரை உயர்கல்வித் துறை செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் பல்கலைக் கழகத்தை சேர்ந்த சிண்டிகேட் உறுப்பினர்கள் பரங்கிப்பேட்டை கடல்வாழ் உயிரியல் மையம் இயக்குனர் சீனிவாசன், பல்கலைக்கழக மருத்துவமனை டாக்டர் பாலாஜி சாமிநாதன் ஆகியோர் நிர்வாக குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.