சில்மிஷ ஆசிரியர் வேண்டாம்; அமைச்சர், டி.இ.ஓ.,விடம் மனு
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே அரசு உயர்நிலைப் பள்ளிக்கு சில்மிஷ ஆசிரியரை நியமிக்க வேண்டாம் எனக் கோரி அமைச்சர், மற்றும் கல்வித் துறை அதிகாரியிடம் மனு கொடுக்கப்பட்டது.கடலுார் மாவட்டம் விருத்தாசலம் டி.இ.ஓ.,விடம், எடச்சித்துார் தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர் மலர்கொடி பரமகுரு, கிராம மக்கள் கையெழுத்துடன் கொடுத்த மனுவில், எடச்சித்துார் கிராமத்தில் இரு பாலரும் படிக்கும் அரசு உயர்நிலைப் பள்ளியில் பணிபுரிந்த அறிவியல் ஆசிரியர் அருள்ராஜ் , கடந்த ஓராண்டிற்கு முன் மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். அவரது பெற்றோர், பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் கிராம மக்கள் போராட்டத்தால் இடமாறுதல் செய்யப்பட்டார். அவர், மீண்டும் எடச்சித்துார் பள்ளிக்கு வருவதாக தெரிகிறது. அந்த ஆசிரியரை மீண்டும் இந்த பள்ளிக்கு வர அனுமதிக்க வேண்டாம், என கூறியுள்ளனர். இந்த மனுவை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சரிடமும் வழங்கியுள்ளனர். விருத்தாசலம் டி.இ.ஓ., சுப்ரமணியன் கூறுகையில், &'கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வழங்கிய மனு குறித்து சி.இ.ஓ.,வுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் மீண்டும் அந்த பள்ளிக்கு வர வாய்ப்பில்லை&' என்றார்.