உள்ளூர் செய்திகள்

ஜெயலலிதா பல்கலை மூடல்: அமைச்சர் பொன்முடி தகவல்

சென்னை: ஜெயலலிதா பல்கலை பெயரளவுக்கு இருப்பதால் அது மூடப்படும் என உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி:ஜெயலலிதா பல்கலை நிதி நிலைமை நன்றாக இல்லை. எனவே அது மூடப்படும். அண்ணாமலை பல்கலை தனிப்பட்ட பல்கலையாக செயல்படுகிறது. அதுவும் நிதி இல்லாமல் சிரமப்படுகிறது. எனவே அண்ணாமலை பல்கலையை அப்லியேட்டட் பல்கலையாக மாற்ற முடிவு செய்துள்ளோம்.அதில் விழுப்புரம் கடலுார் கள்ளக்குறிச்சி மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள கல்லுாரிகள் சேர்க்கப்படும். கல்வி வளர்ச்சியை முன்னிட்டு இந்த நடவடிக்கையை எடுக்க உள்ளோம்.நிதி நிலை மாணவர்கள் நலன் கருதி நான்கு மாவட்ட கல்லுாரிகள் அண்ணாமலை பல்கலையில் இணைப்பு கல்லுாரிகளாக இணைக்கப்படும். இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்