உள்ளூர் செய்திகள்

பல்துறை ஆராய்ச்சி பல்கலை மத்திய அரசு பெருமிதம்

புதுடில்லி: &'&'மத்திய அரசின் பல்துறை கல்வி மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் இளைஞர்களுக்கு பல புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதோடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையில் உலகளாவிய மையமாக இந்தியாவை உருவாக்கும்&'&' என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.டில்லியில் &'வீடியோ கான்பரன்ஸ்&' வாயிலாக நடைபெற்ற உலக பல்கலைக்கழக மாநாட்டில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதாவது:நம் நாட்டின் உயர்கல்வி முறை பல்துறை கல்வி மற்றும் ஆராய்ச்சிகளில் நவீன சிந்தனைகளை புதிய கல்வி கொள்கை உருவாக்கி உள்ளது. பிரதமர் மோடியின் தற்சார்பு இந்தியா திட்டத்துக்கு உருவம் அளிக்கிறது.&'இந்தியாவிலேயே கற்று; இங்கேயே பணியாற்று&' என்ற மத்திய அரசின் கொள்கையினால் உலக அளவில் கல்விக்கான இடமாக நம் நாடு உருவெடுக்கும். இங்கு மாணவர்களுக்கு மொழி தடையாக இருக்காது. மத்திய அரசின் பல்துறை கல்வி இளைஞர்களுக்கு பல புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும். பல்வேறு துறைகளுக்கு இடையிலான ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கும். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறைகளில் உலகளாவிய மையமாக நம் நாடு உருவெடுக்கும். இவ்வாறு பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்