உள்ளூர் செய்திகள்

அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை

அரசு உதவி பெறும் இப்பள்ளியானது 1948 முதல் 75 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இப்பள்ளி தலைமையாசிரியராக பொறுப்பேற்ற மீனா, தன்னுடன் பணிபுரியும் ஆசிரியருடன் இணைந்து சொந்த செலவில் ரூ.17 லட்சத்தில் பள்ளியை புதுப்பித்துள்ளார். மேலும், பள்ளியின் மாணவர் எண்ணிக்கை 8 மட்டுமே இருந்த நிலையில் தற்போது 48 ஆக உயர்த்தி உள்ளார். தற்போது புதிதாக சேரும் மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் அனைவருக்கும் ரூ. 2 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கி உள்ளார். ஆசிரியைகள் தமிழ்ச்செல்வி, ஹேமலதா மற்றும் பெற்றோர்கள் மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.தலைமை ஆசிரியை மீனா கூறுகையில்:கல்வி கட்டணத்திற்காக பெற்றோர்கள் தடுமாறும் நிலையில், பின்தங்கிய குழந்தைகளின் கல்விக்காக சொந்த நிதியில் ஊக்கத் தொகை வழங்குகிறோம். வரும் காலங்களில் அதிக அளவில் மாணவர்கள் சேர்க்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்